அதிமுகவில் ஸ்லீப்பர் செல் யாரும் கிடையாது – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் அதிமுக சார்பில் அண்ணாபிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜீ.ஆர், ஜெயலலிதா ஆன்மாக்கள் அதிமுகவை வழிநடத்துகிறது.1989ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்புகிறது.விரைவில் இரட்டை இலைச்சின்னம் மீண்டும் பெறப்படும், 2021 வரை இந்த ஆட்சி தொடரும், இது அதிமுக ஆட்சி இல்லை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி, இந்த ஆட்சியை யாராலும் வீழ்த்த முடியாது, இதனை பாதுகாக்க தேவையான ராஜதந்திரங்களை செய்வோம்,

அரசியல் என்றால் ராஜதந்திரம் தான், பெரும்பான்மையை நீருபிக்க தேவையான அரசியலை செய்வோம், இடைத்தேர்தல், பொது தேர்தல் எது வந்தாலும் அதிமுக வெற்றி பெறும், துரோகிகளுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆன்மா தண்டணை கொடுக்கும் என்றார். பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுக பெருன்பான்மையுடன் ஆட்சி செய்கிறது.

திமுக மாதிரி மைனாரிட்டி ஆட்சி கிடையாது,அதிமுகவில் ஸ்லீப்பர் செல் யாரும் கிடையாது, தினகரனை நம்பி போனாவர்கள் பதவி இழந்தது வீட்டிற்கு போனது தான் மிச்சம், சட்டமன்ற மரபுபடி சபாநாயகர் முடிவு எடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.