தமிழ் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, சினிமா டிக்கெட்டுகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் கூறியுள்ளார்.
இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில்,
கேட்டதை அரசு கொடுத்துவிட்டது, அதனால் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க தேவை இல்லை. திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, அது பற்றி பேச முடியாது. திரையரங்குகளில் உணவுப் பொருட்கள் அனைத்தும் எம்ஆர்பி விலைக்கே விற்பனை செய்யப்படும். கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வோருக்கு உறுதுணையாக இருக்கமாட்டோம். பெரிய திரைப்படம். சின்ன திரைப்படம் என்ற வேறுபாடு இனி கிடையாது என்று அபிராமி ராமநாதன் கூறினார்.
மெர்சல் திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியிடப்படும் என்று நடிகர் விஷால் கூறினார்.