மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் பெறாத வாகனங்களுக்கு இனி இன்ஷூரன்ஸ் கொடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெட்ரோல் நிலையங்களில் மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்கும் வசதிகள் இருப்பதில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது. இன்னும் 4 வாரங்களில், அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் மாசுக் கட்டுப்பாடு மையங்களை மைக்க வேண்டும் என மத்திய போக்குவரத்து அமைச்சகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் விண்ணப்பிக்கும் வாகனங்களில், 96% தேர்ச்சி பெறுவதாக மத்திய மாசுக் கட்டுப்பாடு ஆணையம் தெரிவித்தது. “அது சாத்தியமல்ல. சோதனை சரியாக நடத்தப்படுவதில்லை அல்லது அவர்களின் இயந்திரங்களில் கோளாறு இருக்கலாம். இதுபோன்ற மாசுக்கட்டுப்பாடு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என மாசுக் கட்டுப்பாடு ஆணையம் கோரிக்கை விடுத்தது.