சினிமாவில் அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது – ராய் லட்சுமி

சிலர் ஜாலிக்கும், படுக்கைக்குமே சினிமாவுக்கு வருகிறார்கள் என்று அதிரடியாகக் கூறியுள்ளார் நடிகை ராய் லட்சுமி. பாலிவுட்டில் அவர் நடித்துள்ள ஜூலி 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார். இந்தப் படத்தில் இவரின் அரை நிர்வாணக் காட்சிகள் பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளதாக பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்நிலையில் ஜூலி 2 பற்றியும் திரையுலகம் குறித்தும், ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

சினிமாவில் அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், எனக்கு அந்த பிரச்னை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள், முன்னேறத் துடிக்கும் நடிகைகளை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். சிலர் சினிமாவுக்கு வருவதே சூதாட, ஜாலியாக இருக்க, நடிகைகளுடன் படுக்கதான். அவர்களால் சினிமா துறையின் பெயர் கெடுகிறது. வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் படம் எடுப்பவர்கள் நடிகைகளுடன் படுக்கையை பகிர்ந்து தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொண்டால் அவர்களின் படைப்பில் ஏதாவது தாக்கம் இருக்குமா? இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் பிரபலமான நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அவர்கள் அதை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கவும் செய்கிறார்கள் என்றெல்லாம் கருத்து கூறியுள்ளார்.