குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அதனை விரைவில் நிறுத்த முயற்சிக்க வேண்டும். தானாக போய்விடும் என்று காத்துக் கொண்டிருந்தால், பின் குழந்தை அழத் தொடங்கி, அதன் அழுகையை நிறுத்துவது பெரும் அவஸ்தையாகிவிடும். ஆகவே அத்தகைய விக்கலை உடனே நிறுத்துவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன.
1 தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குகிறது. இதனால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள் அதிகப்படியான காற்றை விழுங்காமல் இருப்பதற்கு, பால் கொடுக்கும் நேரத்தில் ஒரே பக்கத்தில் கொடுக்காமல், அடிக்கடி நிலையை மாற்றிக் கொண்டே இருந்தால், குழந்தைகள் அதிகமான காற்றை விழுங்காதவாறு பார்த்துக் கொள்ளலாம், விக்கலும் ஏற்படாமல் இருக்கும்.
2 தாய்ப்பால் கொடுத்தும் விக்கல் நிற்கவில்லையெனில், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். அதைவிட்டு, தொடர்ந்து கொடுத்தால், பின் குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடும். பின்னர் இதுவே அவர்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கிவிடும்.
3 குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு பசிக்கும் முன் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். விக்கல் ஏற்படுவதற்கு ஒரு காரணம் வாயுத் தொல்லை என்றும் சொல்லலாம்,. எனவே குழந்தைகள் வாயுத் தொல்லையினால் தான் விக்கல் எடுக்கிறார்கள் என்றால், அதன் அறிகுறியாக அவர்கள் வாந்தி எடுப்பார்கள். ஆகவே அவர்களுக்கு வாயுத் தொல்லை ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது பால் கொடுக்க வேண்டும்.
4 தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பம் விட வேண்டும். ஏப்பம் வந்தால், தாய்ப்பாலின் போது, அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். சில சமயங்களில் அத்தகைய ஏப்பமும் குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
5 குழந்தைகள் விக்கல் எடுக்கும் போது அவர்களது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால், அவை விக்கலை நிறுத்திவிடும்.