எழுத்தாளராக இருக்கும் அச்யுத்குமார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்கிறார். தான் எழுதிய கதாபாத்திரங்கள் நேரில் வந்து மிரட்டுவதாக கூற காவல் நிலையத்தில் அனைவருமே சிரிக்கின்றனர். இருந்தாலும் புகார் அளித்துவிட்டு செல்கிறார். அன்றைய இரவே டிஜிபி மனோபாலாவின் மகள் காணாமல் போக, மறைமுகமாக தேடும் பணியை போலீஸ் அதிகாரி அருள்நிதியிடம் ஒப்படைக்கிறார். அதே சமயம் அச்யுத்குமார் வீட்டில் கான்ஸ்டபிள் காளி வெங்கட்டை அனுப்பி அவருடனேயே இருக்குமாறு போலீஸ் உயர் அதிகாரி சொல்கிறார். அதன்படி காளி வெங்கட் அச்யுத்குமார் எழுதும் கதையை படிக்க அது அப்படியே நிஜத்தில் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் அருள்நிதி விசாரிக்கும் இடங்களையும், சாட்சிகளையும் அச்சு பிசறாமல் முன்கூட்டியே அச்யுத்குமார் எழுத அதிர்ச்சியாகிறது போலீஸ். இதனால் குழப்பமடையும் அருள்நிதி இறுதியில் காணாமல் போன டிஜிபி மகளை கண்டுபிடித்தாரா? எதற்காக டிஜிபி மகள் கடத்தப்பட்டார்? உண்மையான காரணம் என்ன? எழுத்தாளரின் நிஜம் வெளிவருமா? அதன் பின் என்ன நடந்தது? என்பதே படத்தோட மீதிக்கதை.
நடிகை-நடிகர்கள்:
அருள்நிதி, மதுபாலா, அச்யுத்குமார், ஸ்மிருதி வெங்கட், சேதன், ராகவ் விஜய், காளி வெங்கட், மைம்கோபி, சூப்பர் குட் பிலிம்ஸ் சுப்ரமணி, ஹர்வின் ராம், மரியா வெங்கட், செந்து மோகன், மற்றும் பலர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
இசை-ஜிப்ரான் ஒளிப்பதிவு-பி.ஜி.முத்தையா
பாடல்கள்-விவேகா
படத்தொகுப்பு-அருள் ஈ.சித்தார்த்
கலை-வினோத் ரவீந்திரன்
சண்டை-பிரதீப் தினேஷ்
தயாரிப்பு நிர்வாகி-உமா மகேஷ்வர ராஜு
தயாரிப்பு மேற்பார்வை-ரவிச்சந்திரன்.கே
நிர்வாக தயாரிப்பு-ஆன்டோ.எல். பி.ஆர்.ஒ-ஏய்ம் சதீஷ்.