தீயவர் கொலை நடுங்க விமர்சனம்

தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில், அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு, ராம்குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, பிஎல் தேனப்பன், சையத், ஜிகே ரெட்டி, ஓஏகே சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தீயவர் கொலை நடுங்க.

இரவில் ஒரு நாள் முகமூடி அணிந்த நபரால் பிரபலமான எழுத்தாளர் ஒருவர் விபத்துக்குள்ளாக்கி கொலை செய்யப்படுகிறார். 

இந்த கொலை வழக்கை விசாரிப்பதற்காக காவல்துறை அதிகாரியாக வருகிறார் அர்ஜுன். 

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான பள்ளியின் ஆசிரியராக இருக்கிறார். மேட்ரிமோனியல் மூலம் பெண் பார்த்துக் கொண்டிருக்கும் பிரவீன் ராஜாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விருப்பம் தெரிவித்து அவருடன் பழகி வருகிறார்.

அர்ஜுன் விசாரித்து கொண்டிருக்கும் கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிக்கும் பிரவீன் ராஜா வசித்து வரும் குடியிருப்பில் நடந்த கொலைக்கும் சம்பந்தம் இருப்பது தெரியவருகிறது . 

அதற்கான விசாரணையை அர்ஜுன் தீவிரப் படுத்தும்போது மேலும் ஒரு நபர் கொள்ளப்படுகிறார். இவர்களை எல்லாம் யார் கொலை செய்கிறார்கள்? எதற்காக கொலை செய்கிறார்கள்? இந்த  கொலைகளுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும் சம்பந்தம் இருக்கிறதா? இல்லையா? என்பதே தீயவர் கொலை நடுங்க படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் – ஜி. அருள்குமார்

கதை & இயக்கம் – தினேஷ் இலெட்சுமணன்

இசை –  பரத் ஆசிவகன்

படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்

ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு

கலை இயக்கம் – அருண்சங்கர் துரை

சண்டை  – காளி

மக்கள் தொடர்பு – யுவராஜ்