“தீர்ப்புகள் விற்கப்படும்” நம் சிந்தனையில் மாற்றம்  ஏற்படுத்தும் ஒரு அழுத்தமான படைப்பாக இருக்கும் – இயக்குநர் தீரன்


நடிகர் சத்யராஜ், ஷ்ம்ருதி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள “தீர்ப்புகள் விற்கப்படும்” படம் டிசம்பர் 31, 2021 உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்களின் வரவேற்பை காண இயக்குநர் தீரன் பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் தீரன் கூறியதாவது…
இப்படம் நல்ல வரவேற்புடன்  தற்போது வெளியாவதற்கு,  நடிகர் சத்யராஜ் சார் தான் மிக  முக்கிய காரணம். அவர் பல தசாப்தங்களாக  எண்ணற்ற தமிழ் திரைப்படங்களின்  முதுகெலும்பாக இருந்துள்ளார். அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் இந்தியத் திரையுலகின் மிக அரிதான ஹீரோக்களில் ஒருவராக அவர் இருந்து வருகிறார, “தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தில் அவர் பங்குகொள்ள சம்மதித்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையைச் சொல்வதென்றால், இந்த கதாபாத்திரத்தை சத்யராஜ் சாரை மனதில் வைத்து தான்  எழுதினேன். அவரை விட வேறு யாராலும் சிறப்பாக இப்பாத்திரத்தை நடிக்க முடியாது, ஒரு  ‘ஆங்கிரி மேன்’ அல்லது  பாசமுள்ள ‘அப்பா’ என இரு அவதாரங்களில் அவரால் மட்டுமே  சிறப்பான உணர்ச்சிகளை திரையில் வெளிக்கொண்டு வர முடியும். ஒரு ரசிகனாக, பெரிய திரைகளில் சத்யராஜ் சாரின் இந்த அம்சங்களை நான் மிகவும் ரசித்திருக்கிறேன், இப்போது அவருடன் இணைந்து பணிபுரியும் போது அதை நேரில் அனுபவிப்பது பேரின்பம். ஸ்மிருதி வெங்கட்டின் நடிப்பு பிரமாதமானது, மேலும் அவரது கதாபாத்திரம் தான் இந்தப் படத்தின் ஆத்மாவாகும். அவர் குறையற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு நடிகர்களும் தங்கள் இயல்பான நடிப்பால் அப்பா-மகள் உறவை திரையில் அழகாக கொண்டுவந்துள்ளனர். இந்த திரைக்கதையை தேர்ந்தெடுத்து, தன்னம்பிக்கையுடன் இயக்குனராகப் பயணம் செய்ய எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சலீம் சாருக்கு நன்றி. இந்தப் படத்தை சிறப்பாக வெளியிட உதவிய டாக்டர் பிரபு திலக் சாருக்கு நன்றி. தீர்ப்புகள் விற்கப்படும்  இதயத்தை தாக்கும் உணர்வுகள் மிக்க, நம் சிந்தனையில் மாற்றம்  ஏற்படுத்தும் ஒரு அழுத்தமான படைப்பாக இருக்கும்.

தீர்ப்புகள் விற்கப்படும்  படத்தை இயக்குநர் தீரன் எழுதி இயக்கியுள்ளார், Al-Tari Movies சார்பில் தயாரிப்பாளர் C.R.சலீம் தயாரித்துள்ளார். 11:11 Productions சார்பில் டாக்டர் பிரபு திலக் இப்படத்தை வெளியிடுகிறார். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவில் பிரசாத் SN  (பின்னணி இசை மற்றும் இசை), கருடவேகா அஞ்சி (ஒளிப்பதிவு), மோகன் ராஜன் & ஸ்ரீகாந்த் வரதன் (பாடல் வரிகள்), நௌஃபல் அப்துல்லா (எடிட்டர்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), C.S.பாலச்சந்தர் (கலை), S.N.அஸ்ரஃப் (தயாரிப்பு நிர்வாகி), முகமது சுபேர் (ஆடை வடிவமைப்பாளர்), ப்ளெசன் (வடிவமைப்பு), மற்றும் ராமகிருஷ்ணா – Four Frames(ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.