கார்த்தி போலீஸ் அதிகாரி பயிற்சியை முடித்து, வீடு திரும்புகிறார். இவரது வீட்டின் அருகே இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், பெற்றோர்களுக்கு தெரிந்து திருமணம் செய்து வைக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக பணிக்கு செல்லும் கார்த்தியிடம், பல கேசுகள் வருகிறது. இவரும் பல ரவுடிகளை பிடிக்கிறார்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் வீடுகளில் புகுந்து, கொலை மற்றும் கொள்ளை அடித்து ஒரு கும்பல் செல்கிறது. இதை கார்த்தி விசாரிக்க தொடங்குகிறார். இந்த விசாரணையில், மர்ம கும்பல் இது போல் தமிழ்நாடு மட்டுமில்லாமல், பிற மாநிலங்களிலும் இது போன்று சம்பவங்களில் ஈடுபடுவதையும், அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கார்த்தி அறிகிறார்.
இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் கார்த்தி கூற, அவர்கள் மெத்தன தனமாக விட்டுவிடுகிறார்கள். இந்த சமயத்தில் எம்.எல்.ஏ. ஒருவர் வீட்டில் கும்பல் புகுந்து கொள்ளையடித்து, அவர்களை கொடூரமாக கொலை செய்துவிட்டு செல்கிறார்கள். இவர்களை பிடிக்க கார்த்திக்கு உத்தரவு வருகிறது. அப்போது, இந்த கும்பல் கார்த்தியுடன் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கிறது.
இதில் போஸ் வெங்கட் மனைவி இறக்க, குழந்தை ரகுல் வீட்டிற்கு சென்று விடுகிறது. இதனால், ரகுலையும் அந்த கும்பல் தாக்கி விட்டு சென்றுவிடுகிறார்கள். இந்த தாக்குதலில் ரகுல் கோமா நிலைக்கு செல்கிறார். அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் கார்த்திக்கு பல இன்னல்கள் வருகிறது. இறுதியில் அந்த கும்பலை கார்த்தி பிடித்தாரா? கோமா நிலையில் இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் உயிர் பிழைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்