உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், பிரதமா் மோடியின் சாதனைகளை பாராட்டும் விதமாக மோடிக்கு 100 அடி உயர சிலை, பிரமாண்ட கோவில் அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள ஒவ்வொரு வளா்ச்சி திட்டமும் தன்னை மிகவும் கவா்ந்துள்ளதாக கூறுகிறார் உத்தரபிரதேச மாநிலம் பொதுப்பணித்துறை நீா்பாசனத்துறையில் பொறியாளராக பணியாற்றிய ஜே.பி.சிங். பிரதமரின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் 5 ஏக்கர் நிலத்தில் அவரின் 100 அடி பிரமாண்ட சிலை ஒன்றை வைத்து கோவில் ஒன்றை கட்டப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜே.பி.சிங் தொடா்ந்து கூறுகையில், “கோவில் கட்டுமான பணி வருகிற 23ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்குகிறது. 2 ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம். கோவில் கட்டுமான பணிக்கு ரூ.10 கோடி வரை செலவாகும் என்று கணக்கிட்டப் பட்டுள்ளது. இந்த பணத்தின் ஒரு பகுதியை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக திரட்ட முடிவு செய்துள்ளேன். பிரதமர் மோடி பாரத மாதாவுக்கு செய்து வரும் சேவையால் நான் உந்தப்பட்டு அவருக்கு கோவில் கட்டும் முடிவுக்கு வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.து.