இஸ்லாமிய விவாகரத்து முறையான தலாக்-கிற்கு உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு பெஞ்ச், 6 மாத கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தலாக் விவாகரத்து முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை பொதுநல வழக்காக எடுத்து அரசியலமைப்பு பெஞ்ச் விசாரித்தது. பல ஆண்கள், உடனடியாக தலாக் என மூன்று முறை கூறி விவாகரத்து செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பெண்கள் அமைப்புகள் முறையிட்டன.
இந்த உடனடி தலாக் முறை சட்டபூர்வமானது தானா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது. இந்நிலையில், தலாக் முறை அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல, என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இதுகுறித்து மத்திய அரசு தீர ஆய்வு செய்து, இஸ்லாமிய மத சட்டங்களை கருத்தில் கொண்டு, தலாக் முறையை யாரும் தவறாக பயன்படுத்த முடியாதபடி புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு 6 மாத காலம் அவகாசம் கொடுத்து, அதுவரை தலாக் முறைக்கு இடைக்கால தடை விதித்துள்ளனர்.