மாணவி வளர்மதிக்கு தாரை தப்பட்டையுடன் வரவேற்பு

கதிராமங்கலம் போராட்டத்தின் போது துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாக கடந்த ஜூலை 13ம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு சமூக அமைப்புகள் வளர்மதியின் கைதுக்கு எதிராக குரல் எழுப்பின. வளர்மதியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் கோரினார். ஒரு சில சமூக அமைப்புகள் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், வளர்மதி மீதான குண்டர் சட்டம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கோவை சிறையில் இருந்த வளர்மதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வெளியே வந்ததும் பல்வேறு சமூக அமைப்புகள் அவரை தாரை தப்பட்டையுடன் வரவேற்றனர்.  வளர்மதியின் சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள், அநீதிக்கு எதிரான நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தனர். நீட் தேர்வினால் இறந்த மாணவி அனிதாவுக்கு நீதி கிடைக்க போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.