மெர்சல் திரைப்படத்தில் ஜீ.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை நீக்க வலியுறுத்தி கடந்த சில தினங்களாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் விமர்சனத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சினிமா பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள சண்முகா தியோட்டரை பாரதியஜனதாகட்சி இளைஞர் அணியினர் முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மெர்சல் திரைப்படத்தில் ஜீ.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை நீக்க வேண்டும், அதிக கட்டணம் வசூல் செய்து விட்டு அரசுக்கு குறைவாக கணக்கு கட்டப்படுவதாவுகம், அதனை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்;பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் மாரிச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசி அவர்களை கலையை செய்தனர். இந்த போராட்டத்தினால் தியேட்டர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.