மணிக்கு 350 கிலோ மீட்டராக அதிகரிப்பு புல்லட் ரயில்களின் வேகம்

மணிக்கு 350 கிலோமீட்டராக சீனத் தலைநகரான பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய் வரை செல்லும் புல்லட் ரயிலின் வேகத்தை அதிகரித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரயிலின் வேகம் மணிக்கு 300 கிலோமீட்டராக குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அது கூட்டப்பட்டுள்ளது. பெய்ஜிங் தெற்கு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட புல்லட் ரயில் பல்வேறு தொழில்நுட்பக்குழுவினரையும் ஏற்றிச் சென்றது.

இதில் 6 விதமான வேகங்கள் சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டன. சுமார் 700 கிலோமீட்டர் இருவழி பயண தூரத்தை அது 4 மணி நேரத்தில் நிறைவு செய்துவிட்டது. சீனாவின் புல்லட் ரயில்களின் வேகத்திற்கு புதிய அத்தியாயம் தொடங்கி விட்டதாக ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.