சலில்தாஸ், அனீஷ் ஹரிதாசன், ஆனந்தன் டி தயாரிப்பில், ஷியாம் & ப்ரவீன் இயக்கத்தில், சரத்குமார், ஷிஜா ரோஸ், இனியா, ஸ்ரீகுமார், சுரேஷ்மேனன், நடராஜன், ராஜ்குமார், மலைராஜன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “தி ஸ்மைல் மேன்”.
சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன்.
ஒரு கார் விபத்தில் தலையில் பலமாக அடிபட்டு, சிகிச்சைக்குப் பின் மீண்டு வருகிறார் சரத்குமார்.
இருப்பினும் ஒரு வருடத்தில் தன்னுடைய அல்சைமர் எனும் நோயால் ஞாபக சக்தி அனைத்தையும் இழந்து விடுவீர்கள் என்று மருத்துவர் பிரியதர்ஷினி கூறுகிறார். அதனால் தான் நினைப்பதையும் மற்றவரிடம் பேசுவதையும் ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்கிறார்.
இப்படி இருக்கும் சமயத்தில் பல நாட்களுக்கு முன் நடந்து கோயம்புத்தூரில் அதிர்ச்சியாக்கிய ஸ்மைல் மேன் மர்டர் மீண்டும் நடக்கிறது. மனிதர்களை கடத்திச் சென்று, கொடூரமான முறையில் அவர்களின் வாயை கிழித்து அதில் சிரிப்பது போல் கொலை செய்து, அதனை பொதுவெளியில் போட்டு விடுகிறான்.
இந்த வழக்கை விசாரிக்கிறார் ஸ்ரீகுமார். பல வருடங்களுக்கு முன்பாக இதே மாறி ஸ்மைல் மேன் தொடர்பான கில்லர் வழக்கை விசாரித்த சரத்குமாரும் ஸ்ரீகுமாரோடு இணைந்து வழக்கை விசாரிக்கிறார்.
ஒரு சூழ்நிலையில் ஸ்மைல் மேன் சைக்கோ கொலையாளியால் சரத்குமாரும் பாதிக்கப்பட்டிருப்பார்.
தன்னுடைய பழைய நினைவுகளை இழந்து, ஞாபக மறதியால் எல்லாவற்றையும் மறந்து கொண்டிருக்கும் சரத்குமார் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? சைக்கோ கொலையாளிக்கும் சரத்குமாருக்கும் இடையே இருக்கும் பிரச்சனை என்ன என்பதே ‘ஸ்மைல் மேன்’ படத்தின் கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : சியாம்-பிரவீன்
இசை : கவாஸ்கர் அவினாஷ்
ஒளிப்பதிவு : விக்ரம் மோகன்
எடிட்டர் : சான் லோகேஷ்
நிதிக் கட்டுப்பாட்டாளர் : அனு மு
நிர்வாக தயாரிப்பாளர் : முகேஷ் சர்மா
ஆடை வடிவமைப்பாளர் : எம் முகமது சுபைர்
ஸ்டண்ட் பிசி ஸ்டண்ட்ஸ் : கே கணேஷ் குமார்
ஒலி வடிவமைப்பு : சதீஷ் குமார்
சவுண்ட் மிக்ஸிங் : ஹரிஷ்
விஎஃப்எக்ஸ் : ஃபயர் ஃபாக்ஸ்
ஒப்பனை : வினோத் சுகுமாரன்
வண்ணக்கலைஞர் : லிஜு பிரபாகர்
ஸ்டில்ஸ் : வேலு
பப்ளிசிட்டி டிசைன்ஸ் : ரிஷி
மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)
ரேட்டிங் 3/5