சுதந்திர இந்தியாவிற்கும் எடிட்டர் பி.லெனினுக்கும் ஒரே வயது

திரையுலகில் 50 வருட அனுபவம் மிக்க பி.லெனின் அவர்கள் 1947 ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாளில் பிறந்தார் என்பது தனிச்சிறப்பு.

இன்றும் தனது 74வது வயதிலும் உற்சாகத்தோடு, புதிய சிந்தனையோடு கட்டில் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம், படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி கட்டில் திரைப்படத்தை தயாரித்து, இயக்கி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது.

நமக்கு முந்தைய தலைமுறை இயக்குனர் பீம்சிங் அவர்கள் எப்போதும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி படங்கள் எடுப்பது வழக்கம். அவரின் மகனான
பி,லெனின் அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்ற அதே ஆண்டு அதே நாளில் பிறந்திருக்கிறார் என்ற செய்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.

உச்ச நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் படங்களிலும்,
இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்தனம்,ஷங்கர் மற்றும் சர்வதேச இயக்குனர்களோடும் எடிட்டிங் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சில படங்களையும் இயக்கிய B.லெனின் அவர்கள் 5 தேசிய விருதுகளை பெற்றவர்.

மேலும்
பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சேர்மனாகவும், ஆஸ்கார் செலக்சன் கமிட்டியின் தலைவராகவும்,இந்திய தேசிய விருதுகள் மற்றும் இந்திய அரசின் சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா உள்ளிட்ட பிரிவுகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

இன்றும் நவீன சிந்தனைகளோடு, தொழில்நுட்பத்தையும் இணைத்து திரைத்துறையில் புதிய வழிகாட்டுதலை ஆர்வமிக்க இளைஞர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்.

புதிதாக சினிமாவுக்கு வருபவர்கள் இவரிடம் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஆளுமைத்திறன் கொண்ட பி.லெனின் அவர்களின் கதை, திரைக்கதை, வசனத்தில், படத்தொகுப்பில் நான் கட்டில் திரைப்படத்தை இயக்குகிறேன் என்பது பெருமையாக இருக்கிறது

இவ்வாறு கூறினார்
இ.வி.கணேஷ்பாபு