குடியரசு தலைவர் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படுவதாக தகவல்

தற்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன், முடியும் நிலையில் புதிய குடியரசு தலைவர் தேர்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்கான தேதி இன்று மாலை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கபட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தேசிய ஜனநாயக கட்சி பெரும் பலத்துடன் இருப்பதினால் அந்த கட்சியின் சார்பில் யார் வேட்பாளாரா நிறுத்தப்படுவார்கள் என்ற ஒரு கேள்வி எழுந்துள்ள நிலையில், ஒட்டு மொத்த எதிர்கட்சிகளும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தலாமா என்று ஆலோசனை நடத்தி அதற்கான கூட்டங்களும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாலை குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.