கர்நாடகாவில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனைக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பெண், டீ வைப்பதற்காக சர்க்கரை சேர்த்த போது பிளாஸ்டிக் வாசனை வந்துள்ளதை கவனித்துள்ளார். பிறகு பாத்திரத்தின் அடிப்பகுதியில் கருப்பாக பிளாஸ்டிக் ஒட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், தண்ணீரில் சர்க்கரையை கொட்டி கரைத்த போது, அதில் இருந்து பிளாஸ்டிக் பிரிந்து வந்துள்ளது.
பிறகு, சர்க்கரையை விற்ற கடை மீது புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த கடையில் இருந்து சோதனைக்காக மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக உணவுத்துறை அமைச்சர், பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த சர்க்கரையை தயாரித்த நிருவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.