முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் மின் ஆளுமை கொள்கை 2017 குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மை செயலாளர் தா.கி.இராமச்சந்திரன், தொழில்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, டாக்டர் ராஜேந்திர குமார், ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டில், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.