காவல்துறை ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா தற்கொலை முயற்சி செய்தது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞர், விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்க, ஸ்டேஷனில் ஆஜராகும்படி ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். ஓவியாவின் மேனேஜரிடம் அவர் விசாரித்தபோது, தற்கொலைக்கு அவர் முயற்சிக்கவில்லை என்று தெரிவித்ததாக இன்ஸ்பெக்டர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.