தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

சி.பி.எஸ்.இ மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக தொடங்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு குறித்து நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசிடம் நீட் தேர்வு விவகாரத்தில் ஓராண்டுக்கான விலக்கு கோரி தமிழக அரசின் கோரிக்கை குறித்து இன்று மாலைக்குள் அனுமதி கிடைக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அப்படி விலக்கு தமிழக அரசு பெற்றால் அதையும் எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் நளினி சிதம்பரம் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.