ராஜா ரங்குஸ்கி படத்தை திருட்டுதனமாக பதிவு செய்ததற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் சக்தி வாசன் – கரூர் கவிதாலயா திரையரங்கு உரிமையாளர்கள் மீது தொடர்ந்திருந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்றுதீர்ப்பு வழங்கியுள்ளது.
திரையரங்கு உரிமையாளரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சம்பந்தபட்ட நபர் களைபோலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தங்களை கைது செய்வதற்கு அல்லது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தும் முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.