தெற்கு அந்தமான் கடற்பகுதியில் தொடர்ந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்றும், அடுத்த 36 மணி நேரத்திற்குள் அது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி மேலும் ஒரு புயல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளார். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் டிசம்பர் 6ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.