டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்‌ஷன் படமான ‘The Lion King’ படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் ஷாரூக் கான்

பெரும்பாலும் ஆங்கில அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பதுண்டு. அந்த வகையான முயற்சிகள் இந்திய சினிமாவில் நடப்பது அரிதான விஷயம். தற்போது டிஸ்னி இந்தியாவின் அதீத முயற்சிகளால் அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில திரைப்படங்கள், ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முன்வந்திருக்கிறார்கள்.

தற்போது டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்‌ஷன் படமான ‘The Lion King’ படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். அவர் மட்டுமல்லாமல் அவரது மகன் ஆர்யனும் முன்னணி கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுக்கிறார்.

பாலிவுட்டின் கிங் ஷாரூக் கான், தி கிங் ஆஃப் தி ஜங்கிள் – Lion முஃபாசாவுக்காக குரல் கொடுக்கிறார். முஃபாசாவின் மகனும், முக்கிய கதாபாத்திரமுமான சிம்பாவுக்காக ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் குரல் கொடுக்கிறார்.

காலத்தால் அழியாத ஜங்கிள் புக் படத்தின் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியிருக்கும் லைவ் ஆக்ஷன் படமான ‘The Lion King’, வரும் ஜூலை 19, 2019-ல் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.