சென்னையை அடுத்த வண்டலூர்-கேளம்பாக்கம் பிரதான சாலை மேலைக்கோட்டையூர் பகுதியில் உள்ள விஐடி பல்கலைகழகத்தினுள் நாய்களை அராஜகமாக கொடுமைபடுத்தியதாக மேனகா காந்தி இன்று காலையில் சமூக வலைதளங்களில் பார்த்தபின்பு சென்னை வேளசேரியில் உள்ள புளு கிராஸ் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ்க்கு மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளதின் அடிப்படையில் டான் வில்லியம்ஸ் தாம்பரம் நகராட்சிக்கு சென்று நகராட்சி உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடத்தியதில் நகராசட்சிக்கு சொந்தமான வாகனத்தை சுந்தரம், தேவா இரண்டு பேரும் எடுத்துக்கொண்டு தாம்பரம் நகராட்சி எல்லைக்குட்படாத மேலைக்கோட்டையூரில் அத்தூமீறி சென்று விஐடி பல்கலைகழகத்தினுள் புகுந்து 11 நாய்களை துன்புறுத்தி, கொடுமை படுத்தி பிடித்து சென்றுள்ளனர்.
அப்பொழுது கருப்பு கலர் நாய் ஒன்றை இருவர் பிடித்து இழுத்து செல்லும் காட்சியானது சமூக வலைதளங்களில் பரவிவந்தது. அந்த கருப்பு கலர் நாய் இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும் பிடித்து சென்ற 10 நாய்கள் நிலமை என்வாகிற்று என்ற கேள்வியை எழுப்பினார் டான் வில்லியம்ஸ், இச்சம்பவம் குறித்து விஐடி பல்கலைகழகம் மீதும், தாம்பரம் நகராட்சி மீதும் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தகந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதாக உறுதியளித்தாக தெரிவித்தனர். விஐடி பல்கலைகழக நிர்வாகத்திற்காக தாம்பரம் நகராட்சி நிர்வாகம் அத்தூமீறி அவர்களது எல்லையை தான்டி அராஜகமாக செயல்பட்டுள்ளனர் என்றும் பணத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது என புளு கிராஸ் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் குற்றம்சாட்டினார். இதேபோல் மிகரு நல ஆர்வலர்கள் சார்பிலும் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.