கும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ

மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிராமாஸ்டரா திரைப்பட குழுவினர் ரன்பீர் கபூர் , அலியா பாட் ,அயன் முகர்ஜி, ஆகியோர்   வானத்தில் ஆயிரக்கணக்கான  ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோவை வெளியிட்டனர்.

கங்கை , யமுனா , சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் இணையும் இடம் திருவேணி சங்கமம் ,ப்ரயாக்ராஜ் . இந்த இடத்தில ஒரு கோடி மக்களின் பார்வையில் ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோ வெளியிடப்பட்டது.

இந்த லோகோவை   வெளியிட கும்பமேளாவை விட சிறந்த இடம் வேறு எதுவும் படக்குழுவினருக்கு கிடைத்திருக்க முடியாது.

இந்த நிகழ்வினை பற்றி படக்குழுவினர் கூறியவை :

கரண் ஜோகர் கூறியவை: “கும்பமேளா கலாச்சார வரலாற்றின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும் .இந்நாளில் லோகோவை  வெளியிட்டது மிகவும் சிறப்பு .

விஜய் சிங் , (CEO , FOXSTAR STUDIOS ) கூறியவை :” பிராமாஸ்டரா  பண்டைய இந்தியாவின் எல்லையற்ற பெருமையை  உயிரோடு கொண்டுவரும் வாகனமாகும்.கும்பமேளா  இந்தியாவின் மிகச்சிறந்த நிகழ்ச்சியைக் காட்டிலும் சிறந்தது என்னவென்றால், பல்வேறு கலாச்சாரங்களின் பண்டைய மரபுகள் ஒரு அற்புதமான உருகலைப் பாத்திரத்தில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. ”

அபூர்வா ( CEO , DHARMA PRODUCTIONS ) கூறியவை; எங்களுடைய பயணத்தைத் தொடங்குவதற்கு கும்பமேளாவை விட மிகவும் தகுதியான நிகழ்ச்சி  இருக்க முடியாது. இந்த அருமையான வாய்ப்பிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

அயன் முகர்ஜி கூறியவை :கும்ப மேளாவில் மகா சிவராத்திரி விழாவில் நாங்கள் எங்களது படத்திற்கான பயணத்தை துவங்கியத்தை சிறந்ததாக கருதுகிறேன்.இந்த லோகோவை    வெளியிட எங்களுக்கு 6 மாத காலம் தேவைப்பட்டது. ட்ரோன்கள் மூலம் இந்த பிரம்மாண்ட லோகோவை     வெளியிட பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தயார்படுத்த பல யுக்திகள் கையாளப்பட்டது.

ஷிக்கா கபூர்  ( CMO , FSS ) கூறியவை; இந்த லோகோவை திட்டமிட்டு இயக்குவது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.படக்குழுவினரின் அனைவரின் முயற்சியினால் இது சாத்தியமாகி இருக்கிறது.

பிராமாஸ்டரா  திரைப்படம் மூன்று பாகங்களை கொண்டது. அதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் 2019 ல் வெளியாக இருக்கிறது.

இந்த பிரம்மாண்ட  படத்தை  இயக்குனர் அயன் முகர்ஜி அவர்கள் இயக்குகிறார்.

தயாரிப்பு :ஹிரோ யாஷ் ஜோகர் கரண் ஜோகர், அபூர்வா மேஹ்டா , நமிட் மல்ஹோத்ரா , ரன்பீர் கபூர் , அயன் முகர்ஜி, & பாக்ஸ்  ஸ்டார் ஸ்டுடியோஸ் .

நடிகர்கள் :அமிதாப் பச்சன் , ரன்பீர் கபூர்,  அலியா பாட் , மௌனி ராய் , நாகர்ஜுனா அக்கினி .