கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டில் உள்ள வ.உ.சி.நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிறுப்பு பகுதிகள் உள்ளன.இதில் 2வது தெருபகுதியில் கடந்த 25நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீh வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.