இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுக்கை

கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தம் ஊராட்சிக்குட்பட்டது நாரணம்மாள்புரம், சுந்தரலிங்கபுரம் பகுதி. இங்கு வாழும் ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர்,ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாலூகா அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கூலி தொழில் செய்து வாடகை வீட்டில் குடியிருக்கும் இந்த மக்களின் ஏழ்மை நிலையினை கருத்தில் கொண்டு தமிழக அரசு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி அப்பகுதி மக்கள் பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தாண்டுராமன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு மனு அளித்தனார். மனுவினை பெற்றுக்கொண்ட அதிகாரி மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.