நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் தியாகராஜன் வீட்டில் சோதனை

நெடுஞ்சாலைத் துறையின் முக்கிய ஒப்பந்ததாரர் தியாகராஜனின் வீடு அலுவலகம் உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொறியாளர் குருமூர்த்தி இவரது மகன் தியாகராஜன் நெடுஞ்சாலை துறையின் முக்கிய ஒப்பந்ததாரர் ஆவார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறையின் பல ஒப்பந்தங்களை எடுத்து வருகிறார். இவர் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரி புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தியாகராஜனுக்கு சொந்தமான சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகம் கே.கே.நகரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் வரி ஏய்ப்பு செய்ததற்க்கான ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களை வைத்து தற்போது தியகராஜனிடம் வருமான வரி புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சோதனையின் போது 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.