தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம் 2.5/5

நடிகை-நடிகர்கள்:

ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன், போஸ்டர் நந்தகுமார், கலைராணி, யோகி பாபு மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு – ஆர்டிசி மீடியா லிமிடெட் சார்பில் துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி
இயக்கம் – ஆர்.கண்ணன்
இசை – ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட்
எடிட்டர் – லியோ ஜான் பால்
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம்
வசனம் – ஜீவிதா சுரேஷ்குமார், சவரி நடனம் – காயத்ரி ரகுராம், சதீஷ் கிருஷ்ணன்
உடை – பிரதீபா
தயாரிப்பு நிர்வாகி – ஒம்சரண்
மக்கள் தொடர்பு – ஜான்சன்

 

பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆசிரியராக பணியாற்றும் ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணம் நடக்கிறது. மாமனார் வீட்டில் மாமியாருடன் அன்றாட வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மகளின் பிரசவத்திற்காக மாமியார் ஊருக்கு சென்று விட அதன் பின் அத்தனை வேலைகளையும் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. ஆண்கள் இருவரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை கேட்டும், சொல்கிறபடி சமைக்க வேண்டும் என்று கட்டளையிடுவதும், மாமனாரின் துணிகளை கையில் துவைக்க வேண்டும் என்று நிர்பந்திப்பதும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு நாள் முழுவதும் வேலை இருந்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பாத்திரம் கழுவும் சிங் ஒழுக ஆரம்பிக்க, அதை சரி செய்ய முயற்சி எடுக்காமல் கணவர் இருப்பதை கண்டு எரிச்சலடைகிறார். நடன ஆசிரியராக வேலைக்கு செல்ல விண்ணப்பிக்கிறார். இதனை கேள்விப்படும் கணவன் மற்றும் மாமனார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடைசியில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலையில் சேர்ந்தாரா? இல்லை கணவன் சொல்படி கேட்டு நடந்தாரா? என்பதே படத்தோட மீதிக்கதை.