கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி மற்றும் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்வி மாவட்ட அலுவலர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கயத்தார் தாசில்தார் முருகனாந்தம் முன்னிலை வகித்தார்.தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு 236 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகளை வழங்கி பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் கடலை மீட்டாய் மற்றும் தீப்பெட்டிக்கு ஜீ.எஸ்.டி. வரி குறைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் மூலமாக வலியுறுத்தப்பட்டது.
கடலைமிட்டாய்க்கு வரி குறைக்குப்பட்டுள்ள நிலையில் தீப்பெட்டிக்கு ஜீ.எஸ்.டி வரி குறைப்பு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது, மத்திய நிதி அமைச்சர் மீண்டும் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அப்போது தீப்பெட்டிக்கு வரி குறைப்பு செய்ய வலியுறுத்தப்படும் என்றும், சிவாஜி சிலையில் திமுக தலைவர் கருணா நதி பெயர் அகற்றப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்கப்படும், அகற்றப்பட்ட சிலையை மணிமண்டபத்தில் வைத்துள்ளோம் தவிர, சிலைக்கும், கல்வெட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது, நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்கப்படும், தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை செயல்படுகிறது, அதற்கும் தமிழக அரசுக்கும் எவ்வித தொடர்பு இல்லை, வருமான வரித்துறை மத்தியரசு கட்டுபாட்டில் உள்ளது. இது வழக்கமான நடைபெறுகின்ற வருமான வரி சோதனை தான்.
எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லவில்லை, தேவையற்ற குற்றச்சாட்டுக்களை,பீதிகளை கிளப்பவது மு.க.ஸ்டாலின், சேலத்திற்கு முன்பு வரை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவுக்கு பின் மாணவர்கள் விழாவிற்கு அழைத்துச்செல்லப்படுவதில்லை, மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை தருகிறார் என்றார். நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், ஊராட்சி செயலாளர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், வானரமுட்டி அரசு மேல்நிலைபள்ளி பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் அலங்காரபாண்டியன், பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.