ஜெய்தேவ் இயக்கத்தில், பாவனா, ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தி டோர்”.
பாவனாவிற்கு தொடர்ந்து அவரின் அப்பா போன் செய்ய, அதனை பாவனா எடுக்காமல் கட் செய்து விடுகிறார், அதனைத் தொடர்ந்து பாவனாவின் அப்பா பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது வானத்திலிருந்து ஒரு பன்னீர் துளி விழுந்து மர்மமான முறையில் இருந்து விடுகிறார்.
இதனால் மன வருத்தத்தில் இருக்கும் பாவனா தனியார் நிறுவனத்தில் ஆர்க்கிடெக் வேலையில் இருந்து விலகி விட முடிவு செய்கிறார்.
அந்த நிறுவனத்தின் தலைவரும் பாவனாவின் குடும்ப நண்பருமான ஜெயப்பிரகாஷ் பாவனாவிடம் பேசி பணிக்கு வருமாறு அழைக்கிறார் பாவனாவும் ஒத்துக் கொண்டு பாதியில் நிறுத்தி வைத்த வேலையை மீண்டும் செய்ய ஆரம்பிக்கிறார்.
தன்னுடைய கட்டிடப் பணியை செய்ய ஆரம்பிக்கும் பாவனாவிற்கு சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன பாவனையும் விரட்டுவதும் தொடர்ந்து வருவதுமாக இருக்கிறது இது கனவுதான் என்று நினைத்து அடுத்தடுத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார் பாவனா.
ஆனால் தொடர்ந்து இதே மாதிரி சம்பவங்கள் நடக்க ரமேஷ் ஆறுமுகம் என்பவர் இது கனவல்ல இது நிஜம்தான் அந்த அமானுஷ்யம் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று சொல்கிறார்.
பாவனாவை பின்தொடரும் பயமுறுத்தும் அந்த அமானுஷ்யம் என்ன? எதற்காக பாவனாவை துரத்துகிறது? என்பதே “தி டோர்” படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
இயக்கம் : ஜெய்தேவ்
ஒளிப்பதிவு : கௌதம் ஜி
எடிட்டிங் : அதுல் விஜய்
இசை : வருண் உன்னி
கலை இயக்குனர் : கார்த்திக் சின்னுடையான்
ஸ்டண்ட் மாஸ்டர் : மெட்ரோ மகேஷ்
ஆடை வடிவமைப்பு : வெண்மதி கார்த்திக்
பாடலாசிரியர் : இளங்கோ கிருஷ்ணன், முருகன் மந்திரம்
பாடியவர்கள் : கே.எஸ். சித்ரா, வருண் உன்னி
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் : சி.சிவச்சந்திரன்
தயாரிப்பு நிர்வாகி : எம்.விஜயகுமார்
ஸ்டில்ஸ் : ராஜா
விளம்பர வடிவமைப்பு : சந்திரு – தண்டூரா
ஒலிப்பதிவு : ஆர். கிருஷ்ணமூர்த்தி
மக்கள் தொடர்பு : பரணி அழகிரி