கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் திருவண்ணாமலை கார்த்திகை மடாலயத்திற்கு சொந்தமான நிலத்தினை சிலர் அபகரிப்பு செய்துள்ளதாகவும், அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5வது தூண் அமைப்பினர் அதன் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். புகார் மனுவினை பெற்றுக்கொண்ட சார்பதிவாளர் முத்துச்சாமி அதற்கு ஒப்புகை சீட்டு வழங்க மறுத்தாக கூறப்படுகிறது. ஒப்புகை சீட்டு வழங்க மறுத்த சார்பதிவாளரை கண்டித்து 5வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் அதன் உறுப்பினர் முருகன் இருவரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களின் போராட்டத்தினை தொடர்ந்து சார்பதிவாளர் ஓப்புகை சீட்டு வழங்கினார்.