கோவில்பட்டி அருகே சுகாதார சீர்கேடுகளை போக்க நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுக்கை

கோவில்பட்டி அருகே சுகாதார சீர்கேடுகளை போக்க நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுக்கை

கோவில்பட்டி அருகேயுள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் ஆலம்பட்டி. இந்த கிராமத்தில் போதிய வாறுகால் வசதி இல்லாத காரணத்தினால் சாலைகளில் கழிவு நீர் தேங்குவது மட்டுமின்றி,கழிவறை தண்ணீரும் சேருவதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, தொற்று நோய்களும் பரவி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராம மக்கள் சி.பி.எம் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜோதிபாஸ் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்தனர்.