போக்குவரத்து வாகனங்களுக்கு ஓரிஜினல் லைசென்ஸ், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தினை வாபஸ் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல்விலையை மத்தியரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சி.ஐ.டி.யூ.ஆட்டோ தொழிலளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கொம்பையா தலைமை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகன், கிருஷ்ணன், வட்ட தலைவர் முருகன் மற்றும் திரளான ஆட்டோதொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.