சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓ. பன்னீர்செல்வம் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி நேரடியாக பேசி தீர்வு காண வேண்டும். அதிக பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்குள்ளும் சண்டை சச்சரவுகள் கிடையாது என அவர் கூறினார். பிறகு ஓ. பன்னீர் செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.