விஜய் ஆண்டனி ஒரு கோடிஸ்வரராக இருந்தாலும் தன் அம்மாவிற்காக சென்னை வந்து பிச்சை எடுப்பார்.அதேபோல் திருவண்ணாமலையை சார்ந்த நடராஜன் என்பவர் மிகப்பெரும் கோடிஸ்வரர் ஆவார், இவருக்கு மூன்று மகன்கள். இதில் மூத்த மகனுக்கு மட்டும் திருமணம் ஆன நிலையில், மருமகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.அதை தொடர்ந்து நடராஜன் சென்னையில் உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகின்றாராம்.இந்த உண்மையை அறிந்த குடும்பத்தினர் உடனே வந்து அவரிடம் பேசி, கெஞ்சி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர், இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது