கெட்ட வார்த்தை மனசில் இருந்து வராது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள டான்ஸ் மாஸ்டர் காயத்ரி அடிக்கடி கெட்ட வார்த்தை பேசியதால் அவருக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   கமல் கூடஅவருக்கு பலமுறை அறிவுரை கூறியுள்ளார். இந்நிலையில் காயத்ரி தனக்கு ஏன் கெட்டவர்த்தை பேசும் பழக்கம் வந்தது என்று இன்று விளக்கியுள்ளார்.  நான் ஆணாதிக்கம் அதிகமுள்ள துறையில் பணியாற்றுகிறேன். அதற்காகவே ஒரு வேஷம் போடவேண்டியதாகி விட்டது. கெட்ட வார்த்தை பேச பழகிக்கொண்டேன்.  மனசில் பட்டத்தை கேட்டுவிடுவேன் ஆனால் எந்த கெட்ட வார்த்தையும் மனசில் இருந்து வராது என தெரிவித்துள்ளார்.