தி அக்காலி விமர்சனம்

பி உகேஸ்வரன் தயாரிப்பில், முகமது ஆசிப் ஹமீது இயக்கத்தில், நாசர், ஜெய்குமார், தலைவாசல் விஜய், சுயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜை, சேகர், யாமினி, தரணி, பரத் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தி அக்காலி.

ஜெயக்குமார் காவல்துறை அதிகாரியாக இருக்கிறார் அவருடைய தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்படுகிறது. சுடுகாட்டில் புதைக்கப்படும் பிணங்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப் பொருட்களை பதிக்க வைக்கிறார்கள் என்கிற தகவல் அந்தக் குழுவிற்கு கிடைக்கிறது.

அதனால் காவல்துறை ரகசிய நடவடிக்கையை அந்த சுடுகாட்டில் எடுக்கும் போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் அவர்களுக்கு தெரிய வருகிறது.

சாத்தானை வணங்குபவர்கள், அங்கு வித்தியாசமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார்.

அதனைப் பற்றி மேலும் விசாரிக்க ஆரம்பிக்கிறார் ஜெயக்குமார். அப்படி விசாரிக்கும் பொழுது அவர்களின் பின்னணி என்ன அதைச் சார்ந்தவர்கள் மாயமானது எப்படி அவர்களின் மரணம் எப்படி ஏற்படுகிறது என்பது தெரிய வருகிறது. உயர் அதிகாரியான தலைவாசல் விஜய் வேண்டாம் என்று சொல்லியும் ஜெயக்குமார் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார். இதற்காக விசாரணையில் இறங்கும்போது பலவிதமான மர்மமான விஷயங்கள் செயல்களும் நடைபெறுகிறது. அந்த மர்மமான விஷயங்கள் என்ன? இதற்கு முக்கிய காரணம் யார்? எத்தனை பேரை இதற்காக நரபலி கொடுத்திருக்கிறார்கள் என்பதே தி அக்காலி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் : முகமது ஆசிப் ஹமீத்
தயாரிப்பாளர் : பி உகேஸ்வரன்
DOP : கிரி மர்பி
கலை இயக்குனர் : தோட்டா தரணி
ஆடை வடிவமைப்பாளர் : பூர்ணிமா
எடிட்டர் : இனியவன் பாண்டியன்
சண்டைக்காட்சி : தினேஷ் காசி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்