ராஜஸ்தான் இளைஞர் சங்கத்தின் 55 வது ஆண்டு புத்தகம் வழங்கும் விழா சென்னை தேனம்பேட்டை காமராஜர் அரங்கில் 2018 ஜூலை 8 ஆம்தேதி நடைபெற்றது. தமிழக அரசின் சிறு,குறு நடுத்தர தொழில்நிறுவனங்களின் செயலாளர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ் இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். தாதா பார்மா நிறுவனத்தின் நிர்வாகி திரு.மோகன் சந்த் தாதா, குரு ஹஸ்தி தங்க மாளிகை நிர்வாகி திரு.ஹரிஷ் காவத், இந்தியா ஷாப்பி டாட் காம் நிர்வாகி திரு. பிரவீன் ஜெயின், மற்றும் திரு.தீப் சந்த் லூனியா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
ராஜஸ்தான் இளைஞர் சங்க புத்தக வங்கி அறக்கட்டளை நிர்வாக செயலர் நிதேஷ் பாக்மர் கூறுகையில் “கடந்த 25 ஆண்டுகளில் ஆர்.ஒய்.எஃப் 1 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த புத்தக வங்கி திட்டத்தால் பயனடைந்துள்ளனர். புத்தக வங்கியில் இருந்து கிடைக்கும் புத்தகங்களால் ஆண்டுதோறும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்துள்ளனர். ஆண்டுதோறும் புத்தக வங்கியால் ஏராளமான ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையில் ஆர்.ஒய்.எஃப் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
புத்தகங்களை வழங்குவதால் இந்த மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை முடிக்கின்றனர். அவர்களுக்காக வேலைவாய்ப்பு முகாமும் கவுன்சிலிங்கும் நடத்துகிறது. வீட்டு வேலை செய்வோர், பால்காரர் ஆகியோரது குழந்தைகள் என பலரது வாழ்க்கையில் இந்த புத்தக வங்கி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இங்கு புத்தகம் வாங்கி படித்த பலர் பிற்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளாகவும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களாகவும் தொழில்முனைவேராகவும் மாறியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வளமான வருங்காலத்தில் காலடி எடுத்துவைத்துள்ளனர். மேலும் ஏராளமான மாணவர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்.ஒய்.எஃப் வாணியம்பாடியில் உள்ள மருதார் கேசரி ஜெயின் கல்லூரிக்கும் புத்தக வங்கி விரிவுபடுத்தப்பட்டது.
இதனால் கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்களது திட்டத்தால் பயனடைந்துள்ளனர். வருங்காலத்தில் ஒட்டுமொத்த வட ஆற்காடு மாவட்டம் முழுவதும் புத்தக வங்கியை விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளது. ஆர்.ஒய்.எஃப் விரிவாக்கத்தின் ஒருபகுதியாக இந்தாண்டு செங்கல்பட்டில் உள்ள வித்யா சாகர் ஜெயின் கல்லூரியில் புத்தக வங்கி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் புத்தகம் தேவைப்படும் ஏராளமான மாணவர்களை சென்றடைய ஆர்.ஒய்.எஃப் திட்டமிட்டுள்ளது. ஆர்.ஒய்.எஃப் அறக்கட்டளை ( பல்வேறு வகையான முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர், புற்றுநோய் மருத்த்துவமனை, மற்றும் சென்னை முழுவதும் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவி செய்கிறது ) ஆர்.ஒய்.எஃப் மெட்ரோ ( உணவு வங்கியை நடத்துகிறது. உணவு தேவைப்படுவோருக்கு உணவுவழங்கி வருகிறது.
இதுவரை 3 கோடியே 50லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது. ஆர்,.ஒய்.எஃப் காஸ்மோ ( இலவசமாக மருந்து வழங்கவும் இதர சுகாதார சேவைகளை ஆற்றவும் மருந்து வங்கியை நடத்துகிறது) ஆர்.ஒய்.ஏ மெட்ரோ ஸ்டார் (சேவைத்திட்டங்களை செயல்படுத்துகிறது) காஸ்மோ எலைட் ( உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் சாதனங்களை இலவசமாக வழங்குகிறது)
திரு.காமராஜர், திரு.எம்.ஜி.ராமச்சந்திரன், திரு. மு.கருணாநிதி உள்ளிட்ட தமிழக முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தில் ஆளுநர்களாக இருந்தவர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. ஆர்.வெங்கட்ராமன், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் ஆர்.ஒய்.எஃப் ஆண்டு விழாக்களில் கலந்துகொண்டு நற்சேவையை வாழ்த்தியுள்ளனர்.