டைகர் வெங்கட் தயாரிப்பில், கேடி நாயக், டைகர் வெங்கட் இயக்கத்தில், வனிதா, சோனியா அகர்வால், டைகர் வெங்கட், பிர்லா போஸ், சுமா ரங்கநாத், சூப்பர் குட் சுப்பிரமணி, பூஜா காந்தி, முமைத்தான், ராயல் பிரபாகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தண்டுபாளையம்.
கர்நாடக பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை உருவாகி இருக்கிறது. ஏற்கனவே கன்னடத்தில் படம் வெளியாகி வெற்றி பெற்றது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் திரைக்கு வந்திருக்கிறது
பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களை தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்தி வருகிறது.
இதனால் மக்கள் அச்சமடைகின்றனர். ஒரு சூழ்நிலையில் அந்த கும்பலை காவல் அதிகாரி கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி தூக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறார்.
மக்களை பயமுறுத்திய கும்பல் ஒழிந்தது என்று போலீசார் எண்ணிக்கொண்டிருக்கும்போது, இன்னொரு கூட்டம் அதே அட்டூழியங்களில் செய்து வருகிறது.
இந்த கூட்டத்தை பிடிப்பதற்காக காவல் துறை அதிகாரி முயற்சி செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் அவரால் அந்த கூட்டத்தை பிடிக்க முடிந்ததா இல்லையா என்பதை தண்டுபாளையம் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : டைகர் வெங்கட்
இசை : ஜித்தன் கே ரோஷன்
ஒளிப்பதிவு : பி இளங்கோவன்
இயக்கம் : கேடி நாயக், டைகர் வெங்கட்
மக்கள் தொடர்பு : வெங்கட்