தண்டேல் விமர்சனம்

கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், பன்னி வாஸ் தயாரிப்பில், சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி, பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ் , மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “தண்டேல்”.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் தண்டேல்.

மீனவ கிராமத்தில் இருக்கும் நாக சைதன்யா, தன்னுடைய கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் கூட சேர்ந்து 2000 கி.மீ.க்கு மேல் தூரம் இருக்கும் குஜராத் கடற்கரைக்குச் சென்று, அங்கிருந்து மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

அப்படி மீன் பிடிக்க செல்லும் குழுவிற்கு நாக சைதன்யா தலைவராகிறார் அதற்கு பெயர் தண்டேல்.

ஒரு வருடத்தில் ஒன்பது மாதங்கள் மீன் பிடித்து விட்டு மூன்று மாதங்கள் மட்டுமே தன்னுடைய குடும்பத்தோடு இருந்து வருகிறார்கள்.

சிறுவயதிலிருந்தே நாக சைதன்யாவும் சாய்பல்லியையும் காதலித்து வருகிறார்கள். நாக சைதன்யாவும் சாய்பல்லவியும் ஒருவருக்கொருவர் உயிரையே வைத்துள்ளார்கள்.

ஒரு சூழ்நிலையில் கடலில் மீன் பிடிக்கப் போன ஒருவர் இறந்து விட அதனைப் பார்த்து சாய் பல்லவி இதுபோல் நாகசைதன்யாவுக்கும் ஏதாவது நடந்து விடும் என்று பயந்து நாகசைதன்யா யாவை மீன்பிடிக்க போக வேண்டாம் என்று கெஞ்சி அழுகிறார்.

ஆனாலும் நாக சைதன்யா இது தான் நம் வாழ்வாதாரம் என்னை நம்பி ஒரு குழு இருக்கிறது, அவர்களுக்கு நான் தான் தலைவன் அதனால் நான் போய் தான் ஆக வேண்டும் என்று கூறிவிட்டு போய்விடுகிறார்.

இதனால் மன வருத்தப்பட்டு தொலைபேசியில் பேசாமல் கோபமாக இருக்கிறார் சாய் பல்லவி.

சில நாட்களில், கடலில் ஒரு பெரிய புயல் ஏற்பட அதில் சிக்கிக் கொண்டு அருகில் இருக்கும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விடுகிறார்கள். பாகிஸ்தான் எல்லைக்குள் வந்ததால் இவர்கள் உண்மையிலேயே மீன்பிடிப்பவர்களா அல்லது தீவிரவாதிகளா என்று எண்ணி அவர்களை பாகிஸ்தான் வீரர்கள் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட 22 பேரும் மீண்டும் நாடு திரும்பினார்களா? இல்லையா? சாய்பல்லவியும், நாகசைதன்யாவும், இணைந்தார்களா?இல்லையா? என்பதே தண்டேல் படத்தோட மீதிகதை.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இயக்குனர் : சந்தூ மோண்டேட்டி

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு : சாம் கே. நாயுடு

எடிட்டிங் : நவீன் நூலி

மக்கள் தொடர்பு : யுவராஜ்

ரேட்டிங் 4.5/5