தண்டட்டி விமர்சனம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் தயாரிப்பில், ராம் சங்கையா இயக்கத்தில், பசுபதி – ரோஹிணி நடிப்பில் வெளியாகியுள்ள படம் “தண்டட்டி”.

சிறிது காலத்தில் ஒய்வு பெற வேண்டிய வயதில், குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால் மனித உரிமை அமைப்பின் விசாரணைக்கு ஆளாகி மாற்றல் வாங்கி வேறு ஊருக்கு வந்திருப்பவர் காவலர் பசுபதி.

அந்தப் பகுதியில் கிடாரிப்பட்டி ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் போலீஸ் போகாது. காரணம் அவர்களை எல்லாம் போலீசாரால் சமாளிக்க முடியாது. அது ஒரு வில்லங்கமான ஊர்.

அப்படிபட்ட ஊரில் இருந்து தன் அப்பத்தாவை காணவில்லை என்று சிறுவன் ஒருவன்
புகார் தர வருகிறான். மற்றும் சில பெண்களும் தங்கள் அம்மாவைக் காணவில்லை என்று வருகிறார்கள். காணமல் போனது ஒரே பெண் ரோஹிணி தான்.

மற்ற காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி விசாரணையில் இறங்கும் சீனியர் காவலர் பசுபதி, ரோஹிணியை கண்டு பிடிக்கிறார். ஆனால், அவர் இறந்து போக, சிறுவனின் வேண்டுகோள்படி இறந்து போன உடலோடு ஊருக்கும் வருகிறார். பாட்டியின் சுயநலமான பாசமில்லாத மகள்கள், மருமகள் , குடிகார மகன் இவர்கள் பற்றி தெரிந்துகொள்கிறார்.

இந்த சமயத்துல, பிணமாக இருக்கும் பாட்டியின் காதில் இருக்கும் தண்டட்டி காணாமல் போகிறது.

பாட்டியின் மகன் (விவேக் பிரசன்னா) ”தண்டட்டியைக் கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால் கொன்று விடுவேன்” என்று பசுபதியை மிரட்ட, மற்றவர்களும் கிண்டல் கேலி செய்ய, பிரச்சனையில் சிக்குகிறார் பசுபதி.

தண்டட்டியை திருடியது யார்? தண்டட்டியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே தண்டட்டி படத்தோட மீதிக்கதை.