தண்டகாரண்யம் விமர்சனம்

நீலம் புரொடக்ஷன்ஸ் & லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அதியன் ஆதிரை இயக்கத்தில், அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா, சபீர் கல்லரக்கல், வின்சு சாம், பால சரவணன், முத்துக்குமார், அருள்தாஸ், யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்  தண்டகாரண்யம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு காட்டு பகுதியில் இருக்கும் கிராமத்தில்  வாழும் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா என்று குடும்பமாக வாழ்ந்து வருகிறார். 

தம்பியாக இருக்கும் கலையரசன் வனத்துறையில் தற்காலிக காவலராக வேலை செய்து வருகிறார். தற்காலிக வேளையில் இருந்து நிரந்தர பணியாளராக வேண்டுமென்று கடினமாக உழைத்து வருகிறார். 

ஆனால் வனத்துறையில் இருக்கும் அதிகாரிக்கும் தினேஷுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கலையரசனுக்கு அந்த தற்காலிக வேலையும் பறிபோய் விடுகிறது. 

இதனால் கலையரசனை காதலிக்கும் காதலியின் பெற்றோரும், ஊர் மக்களும் அவமானப் படுத்துகின்றனர். 

இதனால் தினேஷ் தம்பியை எப்படியாவது  அரசு வேலையில் சேர்த்து விட வேண்டும் என்று நினைத்து, தன்னுடைய விவசாய நிலத்தை விற்று, அதற்கான பணத்தை கொடுத்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு அனுப்புகிறார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் படைப்பிரிவில் இணைந்து பயிற்சி பெற்று வருகிறார் கலையரசன். அங்கு அவருக்கு நண்பனாகிறார் பால சரவணன். இருவரும் பலவித கஷ்டங்களோடு அங்கு பயிற்சி பெறுகிறார்கள். எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் வேலையை வாங்கிக் கொண்டுதான் ஊர் செல்ல வேண்டும் என்று இருக்கிறார்கள். 

ஆனால் அந்த இடத்திற்கு வரும் யாரும் உயிருடன் செல்ல முடியாது என்ற உண்மை கலையரசனுக்கு தெரிய வருகிறது.

அதன் பிறகு கலையரசன் என்ன செய்தார்? அங்கே இருந்து தப்பினாரா? இல்லையா? அந்த பயிற்சி இடத்தில் அப்படி என்னதான் நடக்கிறது என்பதே தண்டகாருண்யம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை & இயக்கம் : அதியன் ஆதிரை
தயாரிப்பு : பா. ரஞ்சித், சாய் தேவானந், சாய் வெங்கடேசுவரன்

தயாரிப்பு நிறுவனங்கள் : நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

இசை : ஜஸ்டின் பிரபாகரன்

பாடல்கள் : உமாதேவி, அறிவு, தனிகொடி,

ஒளிப்பதிவு : பிரதீப் கலிராஜ்

படத்தொகுப்பு : செல்வா ஆர்கே

மக்கள் தொடர்பு : குணா