தமிழகம் எங்கும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு மகிழ்ச்சியோடு கொண்டாடும் வேளையில் ஆங்காங்கே நடக்கும் சில விபத்துக்களும் உயிர் இழப்புக்களும் கவலை அளிக்கிறது. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு வேலை வழங்கவேண்டும், ஜல்லிக்கட்டு போட்டியின் போது அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ், ரத்த வங்கியுடன் அங்கேயே நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார். எனவே ஜல்லிக்கட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கும், அவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் உடனே உயர்தர முதல் உதவியும்,ஏன் ஆங்காங்கே சகல வசதிகளும், இரத்த வங்கியுடன் நடமாடும் மருத்துமனைகளும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியில் இருப்பது உறுதி செய்ய வேண்டும்.அவர்களுக்கு ஏதோ பெயரளவில் சிகிச்சை அளிக்காமல் அவர்களுக்கு மிகச்சிறந்த தரமான உயர்தர மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்க முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு இலவச சிகிச்சைகள், உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஏன் இந்த கவலை என்றல் சமீபத்தில் பாதுகாப்பில் இருந்த ஒரு காவலர் மாடு முட்டி அளவுக்கு அதிகமான இரத்த போக்கால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று செய்தி என்னை மிகவும் மனக் கவலை அடையச் செய்தது, எப்பாடு பட்டாகிலும் இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும். மேலும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், ஜல்லிக்கட்டு விளையாட்டை மற்ற விளையாட்டுக்கள் போல ஊக்குவிக்கும் விதமாக ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் இதன் மூலம் பல இளைஞர்கள் ஜல்லிக்கட்டு விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவர், என்று தமிழிசை கூறியுள்ளார்.