தலைவன் தலைவி விமர்சனம் ⭐⭐⭐

சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் சார்பில், செந்தில் தியாகராஜன்,அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், சரவணன், ஆர் கே சுரேஷ், யோகிபாபு, காளி வெங்கட், மைனா நந்தினி, தீபா சங்கர், ஜானகி சுரேஷ், மகிழினி, அருள்தாஸ், செம்பன், ரோஷ்னி, முத்துகுமார், செண்ட்றாயன், ஆதித்யா கதிர், கிச்சா ரவி, ரோஹன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தலைவன் தலைவி. 

நித்யா மேனன் தன்னுடைய அப்பா கொம்பன், அம்மா ஜானகி சுரேஷ் ஆகியோருடன் தன்னுடைய குழந்தை மகிழினிக்கு மொட்டை அடிப்பதற்காக குலதெய்வ கோவிலுக்கு செல்கிறார்கள்.

அங்கு மொட்டை அடிக்கும் போது விஜய் சேதுபதி என்னுடைய குழந்தைக்கு எனக்கு சொல்லாமலே எப்படி மொட்டை அடிக்கலாம் என்று கேட்டு பிரச்சினை செய்ய ஃபிளாஷ்க்காக வருகிறது கதை.

ஆகாச வீரன் விஜய் சேதுபதியின், அம்மாவாக தீபாவும் அப்பாவாக சரவணன் தங்கையாக ரோஷினியும் இருக்கிறார்கள். 

பேரரசி நித்யா மேனனின் அண்ணனாக ஆர்கே சுரேஷ். 

இரு குடும்பத்தினர் சம்மதத்தின் பேரில் பெண் பார்த்த பிறகு நித்யா மேனனும், விஜய் சேதுபதியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.

சில நாட்களில் நித்யாவின் குடும்பத்திற்கு இந்த திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் நித்யா மேனன் விஜய் சேதுபதியை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி இருவரும் பெற்றோரின் சம்மதத்தை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு இடையே ஏற்படும் சிலசில பிரச்சனைகளால் இருவரும் மூன்று மாதங்களாக பிரிந்து இருக்கிறார்கள். 

அந்த சமயத்தில் தான் குழந்தைக்கு மொட்டை அடிக்க குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது பிரச்சனை ஏற்படுகிறது. 

என்ன மாதிரியான பிரச்சினைகளால் இவர்கள் பிரிந்து இருந்தார்கள்? மீண்டும் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே தலைவன் தலைவி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்

இயக்கம் : பாண்டியராஜ்

இசை : சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு : சுகுமார்

கலை இயக்கம் : கே. வீரசமர்

படத்தொகுப்பு : பிரதீப் ஈ ராகவ்

சண்டை : கலை கிங்ஸன்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

ரேட்டிங் : ⭐⭐⭐