இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் Zee5-இல் வெளிவந்திருக்கும் தொடர் தலைமைச் செயலகம்.
தமிழக முதல்வராக வரும் கிஷோர் மீது ஊழல் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு, அந்த வழக்கும் சில வருடங்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கு ஆந்திர பிரதேசத்தில் நடக்கிறது.
அனைத்து சாட்சிகளும் முதல்வருக்கு எதிராக இருக்க, தீர்ப்பும் முதல்வருக்கு எதிராக தான் வர வாய்ப்பிருக்கும் என்று அனைவரும் நினைக்கின்றனர்.
கிஷோர் ஜெயிலுக்கு சென்று விட்டால், முதல்வர் பதவியை பிடிப்பதற்காக சிலர் விரும்புகின்றனர். கிஷோரின் மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன், கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள். கிஷோரின் நெருங்கிய தோழியும், கட்சி ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் முதல்வர் பதவிக்கு ஆசைபடுகிறார்.
முதல்வர் ஆசை இருந்தாலும், அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் நினைக்கிறார் ரம்யா. அதே சமயம், ஷ்ரேயா சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் கிஷோர்.
தமிழகத்தில் நடக்கும் கொலையை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரியான பரத்.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஜார்கண்ட் மாநிலத்தில் பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்காவை தேடிக் கொண்டிருக்கிறது சிபிஐ.
முதல்வரான கிஷோருக்கு தண்டனை கிடைத்ததா? இல்லையா? பரத் விசாரிக்கும் கொலையின் பின்னணி என்ன? கிஷோருக்கும் ஸ்ரேயா ரெட்டிக்கும் என்ன சம்பந்தம்? ஸ்ரேயா ரெட்டி சொல்வதையெல்லாம் கிஷோர் கேட்க காரணம் என்ன? ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தப்பி வந்த துர்கா யார்? போன்ற பல கேள்விகளுக்கான விடையே தலைமைச் செயலகம் தொடரூடைய மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுதி இயக்கியவர் : ஜி.வசந்தபாலன்
தயாரிப்பாளர் : ராதிகா சரத்குமார், ஆர்.சரத்குமார்
தயாரிப்பு இல்லம் : ராடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட்
DOP : வைட் ஆங்கிள் ரவிசங்கர்
இசை : ஜிப்ரான்
கூடுதல் பின்னணி ஸ்கோர் : சைமன் கே கிங்
கலை இயக்குனர் : வி சசிகுமார்
செயல் : டான் அசோக்
தொகுப்பாளர் : ரவிக்குமார் எம்
ஒலி வடிவமைப்பு : ராஜேஷ் சசீந்திரன்
கலவை : கவி அருண்
DI : மாம்பழம்
VFX&CG : ஷேட்69 ஸ்டுடியோஸ்
நிர்வாக தயாரிப்பாளர்கள் : பூஜா சரத்குமார், கிருஷ்ணா
சந்தர் இளங்கோ
லைன் புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ் : பிரபாஹர் ஜே
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)