நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், சமுத்திரகனி, ஷிவதா, ராஜ்திரண்டார், மூணார் ரமேஷ், பிரேம், சுந்தர பாண்டியன், கொற்றவை, புலிப்பாண்டி, விசாகன் மற்றும் பலர் நடிப்பில் zee5 ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள இணைய தொடர் தடயம்.
1999 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் காவல் நிலையத்தில் சமுத்திரக்கனி எஸ் ஐ யாக வேலை செய்து வருகிறார்.
அந்த காவல் நிலையத்திற்கு புதியதாக இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று வருகிறார் ஷிவதா. சமுத்திரகனி சரியாக வேலை செய்ய மாட்டார் என்று அவரைப் பற்றிய தவறான செய்திகளை ஷிவதாவிடம் சக காவலர்கள் சொல்கிறார்கள்.
அதனை நம்பும் ஷிவதா ஒரு கட்டத்தில் சமுத்திரகனியின் செயலை பார்த்து அவரை பற்றிய உண்மையை தெரிந்து கொள்கிறார்.
அந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு கொலைகள் கொடூரமான முறையில் நடக்கின்றன. அந்த கொலையை பற்றி விசாரிப்பதற்காக ஷிவதா செல்கிறார். அந்த கொலைகளின் தீவிரம் அறிந்து அதற்காக ஒரு குழுவை நியமிக்கிறார்கள். அந்த குழுவில் சமுத்திரக்கனியை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரியிடம் ஷிவதா கேட்டு அவரை இணைத்துக் கொள்கிறார்.
அந்த கொலைகளைப் பற்றி சமுத்திரகனி விசாரிக்க ஆரம்பிக்கும் பொழுது 1995ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாக தான் இந்த கொலைகள் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த கொலையோடு சேர்த்து சுமார் 65 கொலைகளுக்கு மேல் கொலையாளிகள் கொலை செய்திருக்கின்றனர் என்ற உண்மையையும் சமுத்திரக்கனி கண்டுபிடிக்கிறார்.
இந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக இத்தனை கொடூரமாக கொலை செய்தார்கள்? அதற்கான காரணம் என்ன? என்பதை சமுத்திரகனியும் ஷிவேதாவும் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே தடயம் இணையத் தொடரோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : அஜய் கிருஷ்ணா
இயக்கம் : நவீன் குமார் பழனிவேல்

