தாய் கிழவி விமர்சனம்

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஸ் காந்த், இளவரசு, முத்துக்குமார், ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபேக்கா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தாய் கிழவி.

ராதிகா சரத்குமார் கணவனை இழந்த வயதான பாட்டியாக  கடினமாக உழைத்து சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். அவருக்கு மகன்களாக சிங்கம் புலி, அருள் தாஸ், பால  சரவணனும், மகளாக ரேச்சல் ரெபேக்காவும் இருக்கிறார்கள்.

கணவன் சரியில்லாததால் ரேச்சல் ரெபேக்கா தன்னுடைய அம்மாவான ராதிகா சரத்குமார் உடனே இருந்து வருகிறார். 

சொத்தை தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்காமலும் தான் இருக்கும் வரை தான் மட்டுமே அதனை அனுபவிக்க வேண்டும் எந்த மகனிடம் எதிர்பார்த்து நிற்கக்கூடாது என்ற முடிவில் இருந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு அதை கரரான முறையில்  வசூலித்தும் வருகிறார். ஊர் மக்களுக்கு அவரை ஒரு விதத்தில் பிடிக்காமல் இருக்கிறது. அவர் இறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்றும் எண்ணுகிறார்கள். 

அதேபோல அவருடைய மூன்று மகன்களும்  சொத்துக்காக அவர் இறப்பதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். 

இந்த சமயத்தில் ராதிகாவிற்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்து விடுகிறார். இதனால் ஊர் மக்களும் தன் மூன்று மகன்களும் இழப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் நகைக்கடை முதலாளியாக வரும் இளவரசு, முனிஷ்காந்த் மற்றும்  ராதிகாவின் மூன்று மகன்களிடம் ராதிகா 160 பவுன் தங்க நகைகளை வாங்கி விவரங்களை சொல்கிறார். 

ஊரின் வழக்கப்படி அம்மா இறந்த பிறகு வீடு மற்றும் நிலம் ஆகியவை மகன்களுக்கும் அவருடைய நகைகள் பெண் பிள்ளைகளுக்கும் சேரும் என்பதால் தன்னுடைய தாயின் இறப்பை யாருக்கும் தெரியாமல் தள்ளி வைத்து அதற்குள் மொத்த நகைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மகன்கள் திட்டம் போடுகிறார்கள். 

அதற்காக ராதிகாவை காப்பாற்ற முயற்சியில் அவரை மூன்று மகன்களும் ஈடுபடுகிறார்கள். ராதிகாவை காப்பாற்றினார்களா? இல்லையா? நகைகள் கிடைத்ததா? இல்லையா? என்பதையும் ஒரு பெண் எப்படி சமூகத்தில் தைரியமாக தன்னம்பிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருப்பதே தாய்‌ கிழவி.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : சுதன் சுந்தரம் மற்றும் சிவகார்த்திகேயன் 

இயக்கம் : சிவக்குமார் முருகேசன் 

இசை : நிவாஸ் கே பிரசன்னா 

ஒளிப்பதிவு : விவேக் விஜயகுமார் 

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா (D’one)