டெண்டர்கட்ஸின் ஃபிரெஷ் இறைச்சிகள் மற்றும் மீன் நிறுவனம், பொதுமக்களின் இல்லத்திற்ககே நேரடி விற்பனை செய்யும் செயல்திட்டத்தை இன்று சென்னையில் அறிமுகம் செய்தது. இதில் உணவு பாதுகாப்பு தணிக்கை நிறுவனமான பரிக்ஷான்-ன் நிர்வாக இயக்குனர் டாக்டர். V. பசுபதி மற்றும் செஃப் தாமு ஆகியோர் கலந்துக் கொண்டனர். டெண்டர்கட்ஸ் என்ற பெயரிலான இந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனமானது திரு. நிஷாந்த் சந்திரன் என்பவரால் 2016-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்டதாகும். ஆண்டிபயாடிக் மற்றும் ஹார்மோன் செலுத்தபடாத ஃபிரெஷ்ஷான இறைச்சியை மக்களுக்கு வழங்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் இந்த நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரி திரு. நிஷாந்த் சந்திரன் கூறும்போது, ஃபிரெஷ்ஷான, தூய்மையான, ஆண்டிபயாடிக் மற்றும் ஹார்மோன் சேர்க்கப்படாத இறைச்சி, கடல் உணவுப்பொருட்களை வாடிக்கையாளர்கள் இல்லத்திற்ககே எடுத்துச்சென்று, வழங்குவதன் முலம், இந்தியாவில் இறைச்சி வகைகளை மக்கள் வாங்குகின்ற, மற்றும் நுகர்கின்ற வழிமுறையை, மாற்றியமைப்பதே எங்களது குறிக்கோளாக இருக்கிறது எனக்கூறினார். புகழ்பெற்ற செஃப் தாமு அவர்களை எமது பிராண்டு துதராக கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றும், இதனை இணையதளம் வழியாகவும் மற்றும் தொலைபேசி வழியாகவும் ஆர்டர் செய்ய இயலும் எனவும்கூறினார்.